Wednesday, December 15, 2021

நான்?




இந்த பக்கத்தில் என்ன எழுதுவது என்று நிறைய நேரம் யோசித்தேன். யாரேனும் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் இதே மாதிரி மூளை ஸ்ட்ரக் ஆகி விடுகிறது. 

பெயர்: உஷாந்தி ஸ்ரீ கௌதமன், இலங்கை, 

பின்னணி: Development professional. 

ஆம். எனக்கு திருமணமாகி விட்டது. :p  

எழுதுவதை பற்றி கொஞ்சம் சொல்லலாம்.

எழுதுவதா, எழுத்து மூலம் தொடர்பாடுதலா எது என்னை எழுத வைக்கிறதென்று தெரியவில்லை. என் வேலை காரணமாக எனக்கு ஆங்காங்கே கிடைக்கும் இடைவெளிகளில் மட்டும் எழுதுவேன். அதனால் ஏழு வருஷங்கள் ஆகிவிட்டாலும் என்னுடைய நாவல்களின் எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.

என்னுடைய வாசகர்களாகிய உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. கதைகளை வாசித்து விட்டு மட்டும் போகாமல் உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து கொள்வதற்காக! அவற்றை வாசிக்கும் போது மட்டும் தான் நான் நினைத்த விஷயங்கள் எவ்வளவு தூரம் உங்களை சென்றடைந்தது என்று எனக்கு தெரியும். எல்லாவற்றையும் சேமித்து வைத்திருப்பேன், எப்போதெல்லாம் கொஞ்சம் கவலை வருகிறதோ அவற்றை மீளப்படிப்பது வழக்கம். நான் படிக்கும் போது என் வீட்டுக்கு பின்னே குட்டியாக ஒரு செட்டப் வைத்திருப்பேன். எப்போதெல்லாம் மூச்சு முட்டுகிறதோ ஸ்ட்ரெஸ்ஸாக உணர்கிறேனோ அங்கே போய் விடுவேன். வெறும் நாலு கால் வைத்து மேலே தடுப்பு போட்ட என் குட்டி வீடு தான். எதையாவது கிரகிக்க வேண்டுமானாலும் அங்கே தான் வாசம். என்னைப்போல கொஞ்சம் introvert , socially awkward மக்களுக்கு புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். குடும்பமாகவே இருந்தாலும் கூட ஆட்களின் மத்தியில் இருக்கும் போது  பாட்டரி சார்ஜ் குறைந்து கொண்டே போகும். மீண்டும் சார்ஜ் ஏற்ற எங்களுக்கு தனிமையும் எங்களுக்கே எங்களுக்கான ஸ்பேஸும் தேவை.

எழுத்தும் வாசகர்களும் எனக்கு என் குட்டி வீடு போலத்தான். எப்பொழுதாவது தான் அங்கே போக முடிகிறது. ஆனால் அங்கே கிடைக்கும் ஆசுவாசம் தொடர்ந்து ஓட உத்வேகம் தருகிறது. வாழ்நாள் முழுக்க அந்த safe space எனக்கு நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. <3

வேறே என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

உங்களுக்கு  ஏதேனும் என்னைப்பற்றி தெரிய ஆர்வமாக இருந்தால் கீழே comments செக்ஷனில் கேட்கலாம். 

Sunday, March 28, 2021

Rhythm Full link

ஒகே மக்களே...

ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன்..

என்னோடு ரிதம் முடியும் வரை கூட வந்த எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.

உங்க எல்லாரோடையும் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

உங்களுக்கே தெரியும் நான் சொல்லிருக்கேன் என்னுடைய யூனிவர்சிட்டியை மைன்ட்ல வச்சு தான் நான் எழுதினேன்னு..convocation நாட்களில் எங்களோட யூனிவர்சிட்டி அவ்வளவு அழகா இருக்கும்.. சில புகைப்படங்கள் உங்களுக்காக 



Open air theatre



எங்களோட அக்பர் பாலம்


பை பை மக்களே.. நெக்ஸ்ட் எப்போ வருவேன்னு தெரியாது..ஆனா வருவேன்...



Wednesday, March 17, 2021

விக்கி


நான் இந்த காரக்டரை கண்டு பிடிக்கும் போது ஒரு டெம்ப்ளேட் வச்சிருந்தேன்.

பலருக்கு தெரியும். என்னுடைய யூனிவர்சிட்டி ஞாபகங்களை தூசு தட்டி தான் நான் இதை எழுதிட்டிருக்கேன். எங்களோட ஸ்டூடன்ட் யூனியன் மாணவர்கள் எப்போவும் கம்யூனிச சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர்கள். எந்த ஸ்ட்ரைக் நடந்தாலும் மஞ்சள் கறுப்பு வர்ண பாக்ரவுண்டில் ஸ்லோகன்கள் எழுதப்பட்டு சே குவேரா படம் கண்டிப்பாக இருக்கும். அவரை கொண்டாடுவாங்க. அந்த பாய்ஸ் ஒரு மாதிரி ரிசர்வ்ட்டா அமைதியா இருப்பாங்க. பொதுவா மாஸ்டர் மைன்ட் தலைவரா இருக்கறதில்லை. நல்லா பேசி தங்களோட கொள்கைகளை மத்தவங்களுக்கு கொண்டு போற ஜாலி பசங்க பெரும்பாலும் தலைவர், மற்ற பதவிகள்ல இருப்பாங்க. நான் மனதில் வச்சிருந்த விக்கியும் அப்படித்தான் ஒரு ரிசர்வ்ட்டான ஒரு பையன். ஸ்டூடன்ட் யூனியன், கம்யூனிச கொள்கைகள்ல ஈடுபாடான ஆள். 

ஒவ்வொரு batch ம் கண்டிப்பா யூனிவர்சிட்டிக்குள்ளே ஒரு மியூசிக் வீடியோவாவது செய்திருப்பாங்க. நாங்களுமே ஒன்று செய்திருந்தோம் அந்த ரெயில் வே ட்ராக் எல்லாம் சுற்றி சுற்றி :) கொஞ்ச நாளாவே என்னை கதைக்குள்ளேயே வச்சிருக்க நான் அந்த வீடியோக்களை தேடி தேடி  பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏன்னா ஒவ்வொரு இடமும் நாங்க ஆண்ட இடங்களாச்சே 😀 அப்படித்தான் எனக்கு இந்த வீடியோ சிக்கிச்சு. எப்படி இப்படி அமைஞ்சதுன்னே தெரியல. 

இந்த வீடியோல வர்ற பையனும் அதே டெம்ப்ளேட்ல தான் இருக்கான். ஸ்டூடன்ட் யூனியன்ல ஆக்டிவ்வா இருக்கான். தனியா உக்காந்து போராட்டத்துக்கு ஸ்லோகன் எழுதிட்டிருக்கான். ஸ்ட்ரைக்ல முன்னாடி நிக்கிறான். லவ் பண்ணாலும் , யாரும் கவனிக்காத போல சைட் அடிச்சிட்டு இருக்கான். நான் இவன்ல விக்கியை அப்படியே பார்த்தேன். என்ன ஒண்ணு இந்த  பையன் விக்கிய விட கொஞ்சம் குட்டியா இருக்கான். :( உங்களுக்கு அப்படித்தெரியுதா? குட்டி விக்கி!!! and இந்த background எங்களோட university தான்




office work முடிக்காம இருந்து பீல் பண்ணிட்டு காலைல நாலு மணிக்கு எழுந்து ப்ரொப்போசல் செஞ்சு முடிச்சு அனுப்பிட்டு zombie மாதிரி உக்காந்திருக்கேன்.

Awww


அப்புறம் இன்னிக்கு அப்டேட் பண்ணுவேனா தெரியாது. இதை வச்சு அட்ஜஸ்ட் பண்ணி பீல் ஆகவும். ஹி ஹி ஹி தூக்கம் வந்தா தூங்கிருவேன்.  நாளைக்கு கட்டாயம் போஸ்ட் பண்றேன் ஒகே? 

தாங்க்ஸ் மக்களே




Friday, March 12, 2021

ஹரி


நான் சொல்வது தான் கதை என்று இருந்து விட முடிவதில்லை மக்களே. அது உங்களை எப்படி தாக்குகிறது  என்பதில் தான் எனக்கு  திருப்தி கிடைக்கிறதா இல்லையா என்பதே தங்கியிருக்கிறது. கடந்த அத்தியாயத்தால் எனக்கு இவ்வளவு குற்ற உணர்ச்சி வரும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த கதையை தொட்டிருக்கவே மாட்டேன் 

வாசகரை சந்தோஷமாக செய்வது மட்டும் தான் என் நோக்கம். எப்போதுமே..  

போன வருஷம் நான் Jaffna போயிருந்த போது ஒரு விஷயத்தை நேரடியாக பார்த்தேன் . அங்கே வீதி விபத்துக்கள் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கும். அனேகமாக எல்லாம் பைக் ஆக்சிடென்ட்கள் தான் :(  நான் போன நேரம் நானும் மனதளவில் கொஞ்சம் டவுன் ஆகதான்இருந்தேன். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து ஒரு யூனிவர்சிட்டி பையன். எங்கே பார்த்தாலும் போஸ்டர்கள். ஒரு மாதிரியாக இருந்தது ஊரே. என் தம்பிக்கும் அந்த பையனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை, அறிமுகமும் இல்லை. ஆனால் அன்றிரவு முழுக்க அவனை பற்றி தான் பேசிக்கொண்டிருந்தான். Social media முழுக்க அவன் படம் தான். நிறைய பாதித்தது என் மனதை. இவ்வளவு பேரை அவன் பாதித்திருக்கிறான் என்றால் அந்த குட்டி வாழ்க்கையை அவன் நிறைவாக வாழ்ந்திருந்தால் மட்டும் தானே முடியும். 

அவனது நெருங்கிய நண்பர்கள் எப்படி உணர்வார்கள்? யூனிவர்சிட்டி காலம் இளைஞர்கள் எல்லாவற்றையும் புதிதாக கண்டு பெரியவர்களாக மாறும் காலம். சக நண்பனின் இழப்பு நாம் முதல் தடவையாக நமக்கென்று சம்பாதித்த மனிதனின் இழப்பாய் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும். நாம் ஒவ்வொருவருமே பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது இப்படி ஒரு சம்பவமாவது நடந்திருக்கும். நமக்கு தெரியாத நபர்களாக இருந்தாலும் அழுதிருப்போம். எப்போதுமே நினைவில் இருக்கும் அது.. 

ரிதமின் அடிநாதமே இரண்டு இளைஞர்கள், ஒருவரில் ஒருவர் ஆறுதல் கண்டவர்கள்... அதில் ஒருவன் துரதிஷ்ட வசமாக இல்லாமல் ஆகிவிடுகிறான். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த மற்றவன்  மொத்தமாக உடைந்து விலகிசென்று விடுகிறான். அங்கே யார் எப்படி அவனுக்கு உதவினர் . அவன் எப்படி மீண்டான் என்று தான் சொல்ல நினைத்தேன். 

இது ரிதம் .. அந்த "ரி " அதில் எப்போதுமே ஹரி இருப்பான். "ம்" யாரென்று உங்களுக்கு சொல்லதேவையில்லை. தான்வி, தாரிணி ரெண்டு பேரும் தான் அந்த "த"

ஹரிவர்த்தன் 😇💓என்னுடைய ஏஞ்சல் அவன். அந்த சம்பவங்கள் வரும் FB ஐ நான் ஒரு நரேட்டிவ் மோடில் கடக்க நினைத்தேன். அப்படியானால் அவன் இவ்வளவு தூரம் உங்களை தாக்க மாட்டான் என்று நினைத்தேன். ஆனால் அது உயிர்ப்பாகவே இல்லை. விக்ரமைபுரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவனுக்கு எவ்வளவு தாக்கம்இருக்கும் என்று வாசகர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதே தான் தானுவுக்கும். என்னதான் நடத்தையில் ஒருவன் நேசத்தை காண்பித்திருந்தாலும் அவர்கள் கமிட் ஆகியிருக்காத நிலையில் வலுவான காரணம் இன்றி மறைந்து போன ஒருவனை தேடி எந்த பெண்ணும் போக மாட்டாள். காதலில் சுய மரியாதை முக்கியம். 

ஆக தவிர்க்க முடியாமல் தான் அந்த முடிவை கொடுக்க வேண்டி வந்தது. இறுதி நொடியும் ஹரி தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான இருவரோடும் தான் இருந்தான். அவன் சந்தோஷமாக விடை பெற்று சென்றதாக எடுத்துக்கொள்வோம். Sorry மக்களே

சரி. சிலர் இப்படி செய்திருக்கலாமே..ஏன் இந்த முடிவுக்கு போனீர்கள் என்று கேட்டிருந்தீர்கள். இன்பாக்ஸில் கிழியோ கிழி வாங்கினேன். சிலரிடம் ;) அவையெல்லாம் கதைக்கு பொருத்தமாக இருந்திருந்தால் நானே வைத்திருப்பேனே..

1. அட்லீஸ்ட் அவனுக்கு கோமா ஆகியிருக்கலாம் 

ஹரிக்கு கோமா ஆகியிருந்தால் விக்கியும் ப்ரதியும் இருவரின் குணத்துக்கும் அவனை விட்டு விலகியேஇருந்திருக்க மாட்டார்கள். எல்லார் வாழ்க்கையும் அங்கேயே  ஸ்தம்பித்து நின்றிருக்கும். திடீரென அவன் கண்விழித்து நான் யார் என்று கேட்டு சுபமாவதெல்லாம் ரொம்பவே dramatic. அவன் கண்விழிக்காமலே இருந்தால் அதை விட கொடுமையை அவனுக்கு நான் செய்து விட முடியாது. 

3. அப்பா அம்மா விரும்பாததால் Break up பண்ணியதாக காட்டியிருக்கலாம்

கமிட் ஆகி விட்டு அதன் பிறகு அது எப்பேர்ப்பட்ட காரணம் ஆயினும் ப்ரேக் அப் செய்யும் காரக்டர் ரொம்பவே weak ஆனது. அப்படியானால் காதலே ஒரு மிஸ்டேக் என்று தான் எடுக்க வேண்டும். ஹரியை நான் அப்படி உருவாக்கவில்லை. அவன் அந்த சின்ன வயதிலேயே பெற்றோரை எதிர்த்து விக்கிக்காக testimony கொடுத்தவன். அப்படிப்பட்டவன் அவர்கள் ஏற்கவில்லை என்று இந்த வயதில் ப்ரேக் அப் பண்ணுவது நடக்குமா? மற்றப்பக்கம் ப்ரதி அவள் ஐநூறு பேருக்கு முன்னே எழுந்து நின்று தானுவுக்காக தனியே சண்டை போட்டவள் அவளா பயப்பட்டு ப்ரேக் அப் பண்ணுவாள்? அது சாத்தியமே இல்லை.

காயங்கள் என்றும் ரணமாகவே இருந்து விடுவதில்லை மக்களே

சரியான மருந்து கிட்டும் போது ஆறி விடும். ஆனால் தழும்புகள் நம்மோடு கூடவே தான் வரும். சில தழும்புகள்இனிமையான நினைவுகளை மட்டும் தான் மீள நினைவு படுத்தும் . என் ஹரியும் அப்படித்தான்.  மற்ற மூவரும் அவனை குறித்த இனிமையான நினைவுகளை தான் சுமந்து செல்லப் போகிறார்கள்.

உங்கள் மனதை வருத்த படுத்தியிருந்தால் ரொம்பவே சாரி.  

ரிதம் ரொம்பவே இனிமையானது தான்.. என் மீது நம்பிக்கை வைக்கலாம் நீங்கள். தொடர்ந்து வாங்க. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.  

இது வரை தானு மட்டும் தான் கிட்டத்தட்ட வற்புறுத்தி அவனோடு தன்னை சேர்த்துக் கொண்டிருந்தாள். என்னதான் எவ்வளவு பெரிய அடி ஆனாலும் அவன் அந்த பெண்ணை நினைத்து பார்த்திருக்க வேண்டும். தன்னந்தனியே அவனது விலகலோடு, காதல் தோல்வி, உடைந்து நின்ற நண்பி என்று எத்தனையோ விஷயங்களை தனியாக கடந்திருக்கிறாள். இவன் நாலு வருஷம் கழித்து ஒன்றுமே நடவாதது போல திரும்பி வந்து விட்டால் அதெல்லாம் சரியாகி விடாது தானே.. 

அவர்கள் இருவரும் என்ன ஆகிறார்கள் என்று பார்க்கலாம். கூடவே ப்ரதியும் 

நன்றி...


Sunday, February 7, 2021

Rumi

இது  என் போன்ற இசை ரசிகர்களுக்கானது


உருகி உருகி இரவுகளில் கரைய வைத்துக்கொண்டிருக்கிறது இசை

ஏனோ கண்ணீர் வருகிறது 



செவிக்குள் நுழையும் இசை மீட்டல்களின் படிமங்களுக்குள் யாரோ ஒருத்தியின் கதை தூரமாய் என்னை அழைப்பது போலிருக்கிறது..




RUMI “At night, I open the window and ask the moon to come and press its face against mine. Breathe into me. Close the language-door and open the love-window. The moon won't use the door, only the window.”


கண்ணீரில் கசிந்து கரைந்து அப்படியே இசையின் அலைகளோடு உலகம் மறந்து ஒன்றாகி விட மனம் துடித்து தவிக்கையில் எனக்கு பாடவோ இசைக்கவோ வராது என்பது உலகின் ஆகப்பெரும் காதல் தோல்வி ஆகி விடுகிறது....

இதோ இதோ என்னை தொட்டு விடுகிறேன் என்று போக்குக்காட்டும் அந்த ஒருத்தியை நான் கண்டுகொள்ள யாராவது என்னை என் மனதின் ஆழங்களுக்கு அழைத்து சென்றால் நன்றாக இருக்கும்..

Wednesday, January 13, 2021

இதுவரை எழுதியவை



1. நீள்கிறதென் பாதை உன் விழி வழியே


2, மீளாதோ என் வசந்தம் 


3. வரம் தேடும் தேவதை


4. நீ நான் அவன்


5. உனக்கெனவே உயிர் கொண்டேன்


6. சிந்தூரி


7. மெர்குரி நிலவு :குறுநாவல் 


8. சஹி வெட்ஸ் சஞ்சு


9. வித் லவ் மைதிலி


10. இதோ என் பல்லவி


11. கொண்டாட்டம்.காம்


12. அன்புள்ள எதிரி


13. ஆழி அர்ஜுனா


14. ஆரோகணம்


15. மெர்குரி நிலவு : குறுநாவல் 


16. நியதி


17. பச்சை வீடு


18. ரிதம்


19. தியா: குறுநாவல் 


20. ஹைக்கூ நாட்கள்


கிண்டில் இணைப்பு: amazon.in



Sunday, January 10, 2021

PV FULL link

Hi hi 

முழுக்கதை லிங்க் இங்கே இரண்டு நாளைக்கு இருக்கும், 

13/01/2021 மதியம் பன்னிரண்டு மணிவரை வச்சிருப்பேன் . அதுக்குள்ளே படிக்கவும்.

நன்றி. 

கொஞ்சம் சென்சிட்டிவ்வான சப்ஜெக்ட் ஆதலால் அவதானமாக படிக்கவும். உங்கள் கருத்துக்களை ஆவலாய் எதிர்பார்க்கிறேன் நன்றி 

PV full

anbudan,

Ush

Tuesday, January 5, 2021

Guys Next Update will be posted tomorrow morning!

Office ஸ்டார்ட் ஆயிட்டு மக்களே.. இவ்வளவு நாளும் ஒரு வேலையும் செய்யாம ஜாலியா கதை எழுதிட்டே இருந்துட்டேன். அவ்வ்

ஒரு பாதி எழுதினதோட இருக்கு. நான் மோர்னிங் போஸ்ட் பண்ணிட்டு போறேன்

பை பை

அகம் முழுக்கதை

 ஹாய் மக்கள்ஸ்..  இங்கே அகம் முழுக்கதையை படிக்கலாம்.  https://drive.google.com/file/d/1F2OeFSh-OyvsYKjmqq8N1BVfpVGPYWTm/view?usp=sharing இரண...