இந்த பக்கத்தில் என்ன எழுதுவது என்று நிறைய நேரம் யோசித்தேன். யாரேனும் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் இதே மாதிரி மூளை ஸ்ட்ரக் ஆகி விடுகிறது.
பெயர்: உஷாந்தி ஸ்ரீ கௌதமன், இலங்கை,
பின்னணி: Development professional.
ஆம். எனக்கு திருமணமாகி விட்டது. :p
எழுதுவதை பற்றி கொஞ்சம் சொல்லலாம்.
எழுதுவதா, எழுத்து மூலம் தொடர்பாடுதலா எது என்னை எழுத வைக்கிறதென்று தெரியவில்லை. என் வேலை காரணமாக எனக்கு ஆங்காங்கே கிடைக்கும் இடைவெளிகளில் மட்டும் எழுதுவேன். அதனால் ஏழு வருஷங்கள் ஆகிவிட்டாலும் என்னுடைய நாவல்களின் எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.
என்னுடைய வாசகர்களாகிய உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. கதைகளை வாசித்து விட்டு மட்டும் போகாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக! அவற்றை வாசிக்கும் போது மட்டும் தான் நான் நினைத்த விஷயங்கள் எவ்வளவு தூரம் உங்களை சென்றடைந்தது என்று எனக்கு தெரியும். எல்லாவற்றையும் சேமித்து வைத்திருப்பேன், எப்போதெல்லாம் கொஞ்சம் கவலை வருகிறதோ அவற்றை மீளப்படிப்பது வழக்கம். நான் படிக்கும் போது என் வீட்டுக்கு பின்னே குட்டியாக ஒரு செட்டப் வைத்திருப்பேன். எப்போதெல்லாம் மூச்சு முட்டுகிறதோ ஸ்ட்ரெஸ்ஸாக உணர்கிறேனோ அங்கே போய் விடுவேன். வெறும் நாலு கால் வைத்து மேலே தடுப்பு போட்ட என் குட்டி வீடு தான். எதையாவது கிரகிக்க வேண்டுமானாலும் அங்கே தான் வாசம். என்னைப்போல கொஞ்சம் introvert , socially awkward மக்களுக்கு புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். குடும்பமாகவே இருந்தாலும் கூட ஆட்களின் மத்தியில் இருக்கும் போது பாட்டரி சார்ஜ் குறைந்து கொண்டே போகும். மீண்டும் சார்ஜ் ஏற்ற எங்களுக்கு தனிமையும் எங்களுக்கே எங்களுக்கான ஸ்பேஸும் தேவை.
எழுத்தும் வாசகர்களும் எனக்கு என் குட்டி வீடு போலத்தான். எப்பொழுதாவது தான் அங்கே போக முடிகிறது. ஆனால் அங்கே கிடைக்கும் ஆசுவாசம் தொடர்ந்து ஓட உத்வேகம் தருகிறது. வாழ்நாள் முழுக்க அந்த safe space எனக்கு நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. <3
வேறே என்ன சொல்வதென்று தெரியவில்லை.
உங்களுக்கு ஏதேனும் என்னைப்பற்றி தெரிய ஆர்வமாக இருந்தால் கீழே comments செக்ஷனில் கேட்கலாம்.
உங்களுடைய முழு விவரம் வேண்டும் .என்னுடைய கல்லூரியில் நான் உங்களுடைய நாவலை project செய்வதற்கு எடுத்துள்ளேன் ஆசிரியர் குறிப்பு தேவைப்படுகிறது.
ReplyDeleteHi Thank you for contacting me. Please contact me via ushanthygowthaman@gmail.com, I'll help you with the information you may need. Regards, Ush
DeleteJust love all your novels and keep writing.... everytime read your novel makes me read as fresh (greatest work of your writings 😀😃) everytime I used to imagine the situation (especially the space),and all the best for your higher studies 💐💐
ReplyDeleteAwww thank you so much. I am humbled and blessed. Verenna silla ❤️
ReplyDelete