Thursday, December 31, 2020

Heart to heart

 ஹாய் மக்களே..

2021 பிறக்க எங்களுக்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கிறது. இந்த வருஷம் ரொம்பவே மாறுபட்ட, கஷ்டமான, சில புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திய, சில கதவுகளை பூட்டி, சில கதவுகளை திறந்த வருஷமாக இருந்தது.

அடுத்தது என்ன என்ற நிச்சயமில்லாத நிலை இன்னும் கேள்விக்குறியாகத்தான் நின்று கொண்டிருந்தாலும் நாளை நல்லதை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டு செல்ல வைக்கிறது.

நான் ஒரு வருஷமாக இந்தப்பக்கமே எட்டிப்பார்க்கவில்லை, என்னதான் வாழ்க்கையின் மற்றப்பக்கங்கள் எல்லாம் நிற்காமல் ஓடினாலும் எனக்குள் ஒருபக்கம் மட்டும் புரட்டப்படாமலே இருந்தது. நான் எழுதுவதையும் உங்களோடு பேசுவதையும் மிஸ் செய்தேன். நேரம் இல்லாமல் நான் இந்தப்பக்கம் வராமல் இருக்கவில்லை மக்களே.. நான் எத்தனையோ நாவல்கள் ஆரம்பித்தேன்..ஒவ்வொரு மாதமும் எதையோ எழுதிக்கொண்டு தான் இருந்தேன். ஒரு பதினைந்துக்கு கிட்ட இருக்கும். எதுவுமே ஐந்து பகுதிகளை தாண்டவே இல்லை..போஸ்ட் பண்ணாமலே தூக்கி போட்டுவிட்டேன். அவ்வளவு நேரத்தை வேஸ்ட் பண்ணி எழுதியும் எதுவும் சரி வரவில்லை என்ற மனக்கஷ்டம் வேறு..  ஒரு கட்டத்தில் நினைத்தேன், சரி நமக்கு சரக்கு தீர்ந்து விட்டது போலிருக்கிறது. இனிமேல் நானும் ஒரு கட்டத்தில் எழுதினேன் என்று சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் என்றே நினைத்து விட்டேன். 

எதையும் பார்க்க பிடிக்கவில்லை. பேஜை மியூட்டில் போட்டு, என் சைட் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அதனால் ரினியூவல் நோட்டிபிக்கேஷன் வந்ததையும் பார்க்கவில்லை.  சைட் என் பழைய டிராப்ட்களோடு தூக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல லாப்டாப்பின் மீது படுத்து தூங்கி அதையும் உடைத்து புதிது வாங்கியாயிற்று. ஆக எழுதியவை ஏதும் என் கையில் இல்லாமல் ரெண்டு மாசம் சுற்றிக்கொண்டிருந்தேன். என் தொழில் வாழ்க்கை நாளைக்கே புதிதாக மாறும். ஆனால் என் எழுத்து என்னோடு கூடவே வளர்ந்தது. அதை தொலைத்து விட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு வேளை பல விஷயங்கள் மனதை போட்டு உடைத்துக்கொண்டிருந்ததோ அதனால் தான் என்னால் கதையில் ஒன்ற முடியவில்லையோ தெரியவில்லை

நவம்பர் மாசம் COVID உபயத்தில்  வீட்டில் இரண்டு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆக மொத்தம் மூன்று வாரங்கள். பதினெட்டு வயதுக்கு பின் என் அம்மா அப்பாவோடு நான் செலவழித்த ஆகக்கூடிய காலம் அது தான்.  இல்லாவிட்டால் ஆகக்கூடியது ஒரு வாரம் தான் கிடைக்கும். அந்த நேரம் தான் ஏதோ ஒரு Juke box இல் சட்டென்று ஒரு பாடல் பாட ஆரம்பித்தது. கொஞ்சம் பழைய பாடல் தான். ஆனால் நான் அப்போது தான் புதிதாய் கேட்டேன்... மனதுக்குள் எதுவோ கிளிக் ஆனது. இனிமேல் போஸ்ட் செய்துவிட்டு பாதியில் நிறுத்தினால் அதை விட அவமானம் வேறொன்றுமில்லை. ஆக என் அன்பர்கள் நீ முடிப்பாய் என்று நம்பினால் மட்டும் போஸ்ட் செய்ய சொன்னார்கள். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை நான் சொன்னேன்.. ஒரே ஒரு முயற்சி பண்ணி பார்க்கிறேன். இத்தோடு இதில் நான் நேரத்தை வேஸ்ட் செய்ய மாட்டேன் என்று.. அப்படி தான் கண்மணி பிறந்தாள்.

எப்போதுமே நான் முழுக்கதையை யோசித்துக்கொண்டு ஆரம்பிப்பதில்லை..குருட்டு நம்பிக்கையில் போஸ்ட் செய்தேன்.. நானே கையில் வைத்துக்கொண்டு திரும்ப திரும்ப வாசிப்பதால் தான் அந்த கதை போரடித்து போய் தொடர முடியாமல் போகிறது என்று ஒரு சந்தேகம் வேறு. சரி. அட்லீஸ்ட் ஒரு பத்து பேராவது தொடர்ந்து படிப்பார்கள் தானே..அவர்கள் சொல்வதில் இருந்து நான் கதையை ஜட்ஜ் பண்ணி கொள்வேன் என்று தான் ஆரம்பித்தேன். இருபத்திநான்கு மணிநேரமும் என் வீட்டில் ஒரு ப்ளே லிஸ்ட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. என்னை plot இலேயே பிடித்து வைக்கவாம் ஹி ஹி 

facebook page என்னுடைய  comfort zone இல்லை நிச்சயமாக...அதுவும் இப்படிப்பட்ட மனநிலையில் அங்கே என்னால் எதுவும் பேச முடியாது. அங்கே ப்ரொமோட் செய்யவும் முடியாது. கதையை முடித்த பிறகு எனக்கு திருப்தியாய் எடிட் பண்ணியபிறகு அங்கே போஸ்ட் பண்ணுகிறேன். அதை தவிர கொஞ்சம் பேருக்கு மட்டும் காண்பித்து விட்டு புக் ஆக்கி பணம் பண்ணும் எண்ணம் எனக்கு கிடையாது. உலகின் ஆக மோசமான introvert நான். என்னைப்போய் ஒரு impromptu ஸ்பீச்சை தெரியாதவர்கள் முன்னே செய்ய சொன்னால் எப்படி இருக்கும்? அதே மனநிலை தான் இப்போது நான் page ஐ தவிர்த்ததற்கும் காரணம் ..வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் கதையை முடித்ததும் அங்கே கொடுக்காமல் கிண்டிலில் போடமாட்டேன். Don't worry.

நேற்று கதையை எடிட் செய்ய போகிறேன் என்று சொல்லிவிட்டு நானே ரொம்ப வருத்தப்பட்டேன். இப்போது படித்து வருபவர்களால் தான் இந்தக்கதையே சாத்தியமானது. அப்படியிருக்க அவர்களை விட்டுவிட்டு வேறு யாருக்கு நான் சிறப்பாக எடிட் பண்ணி கொடுக்க போகிறேன்? அவசரப்பட்டு போஸ்ட் செய்வது என் பிரச்சனை அதை வாசகர்களாகிய உங்களிடம் எடுத்துக்கொண்டு போனது ரொம்பவே தவறு. எதை செய்யவேண்டுமென்றாலும் அதை இப்போது படித்து என்னை தொடர்ந்து எழுத வைப்பவர்களுக்காக தானே செய்யவேண்டும் ? மன்னிக்கவும்!இனிவரும் அத்தியாயங்கள் எடிட் பண்ண தேவையிருக்காது :) என்னோடு சேர்ந்து  இந்த நாவலோடு பயணித்த அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும் போல தோன்றியது. நான் எப்போதுமே பொது வெளியில் என் சொந்த உணர்வுகளை பேசியது கிடையாது. ஆனால் இந்த தளம் எனக்கு சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருவதால் மட்டும் இந்த லாங் போஸ்ட். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்த வருஷம் நாவல் மட்டும் இல்லாமல் நிறைய விஷயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம் :)

கதையில் மூன்று அத்தியாயங்கள் எடிட் பண்ண இருக்கிறது.  அதை புதுவருடம் பிறந்ததும் போட எனக்கு மனசு வரவில்லை. சனிக்கிழமை போஸ்ட் செய்கிறேன் மக்களே.. மூன்று எபிசோட்கள் சேர்த்து. சரியா? ஏன் என்பதை சனிக்கிழமை புரிந்து கொள்வீர்கள். 😓 நான் எந்த புள்ளியில் இந்த கதையை ஆரம்பித்தேன் என்பதே இந்த பதினைந்தாவது எபிசோடில் தான் ஆரம்பிக்கிறது. சனிக்கிழமை சந்திப்போம்..

மீண்டும் உங்களுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப  நன்றி..உங்கள் எல்லாருக்கும் இந்த வருடம் சகல சந்தோஷங்களையும் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

அப்புறம் ஒரு song கேட்டு தான் இந்த கதையை ஆரம்பித்தேன் என்று சொன்னேனே..கீழே கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.. அந்த வரிகளை கேட்டால் நீங்களே குழம்பிப்போவீர்கள்.. இந்த songக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் அதிலிருந்து இதை எப்படி கண்டு பிடித்தேன் என்று எனக்கு தெரியாது.. but I just did I guess..



Happy New Year and Thank You once again makkale
 

Thursday, December 24, 2020

அப்டேட்ஸ் டைமுக்கு வராது 2 நாளைக்கு

😅 

Guys! நாளைக்கு பிசியாக இருப்பேன், எனக்கு கொஞ்சம் டைம் குடுங்கோ. 



Love you all!!! 💓💓💓💓💓

Friday, December 18, 2020

லேட் அப்டேட்

மக்களே இன்றும் லேட் ஆகும். நன் இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். இனிமே தான் ஏழுதி போஸ்ட் பண்ணனும்.. 

உங்களுக்கு நேரம் சரியாக சொல்ல முடியாது. சோ காலைல வந்து படிங்க..

எப்படியும் பன்னிரண்டு மணிக்கு முதல் போஸ்ட் பண்ணிடுவேன் 

Saturday, December 12, 2020

Hello

 ஒகே மக்களே... 

வெல்கம் ஹோம்!

நிறைய நிறைய காலத்துக்கு உங்களோடு பேச வேண்டும் என்று தான் எழுதுகிறேன்.

என்னுடைய பழைய வெப்சைட்டை என் கவலையீனத்தால்  ரினியூ செய்ய மறந்து  போய் அதை இழக்க வேண்டி வந்து விட்டது. பெரும்பாலும் பாதியில் விட்ட கதைகளை நான் பத்திரமாக சேமித்து வைக்காமல் அங்கேயே டிராப்ட் மோடில் வைத்திருந்தேன். எல்லாம் போய் விட்டது. இனிமேல் மறுபடி எப்படி டைப் செய்வது போடாங் என்று எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு போய் விட்டேன். 

ஆனாலும் இந்த வருஷம் எதுவுமே எழுதவில்லையே என்ற ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது . ஆசையாக ஆரம்பித்த எதையும் முடிக்க முடியாமல் விதி சதி செய்தாலும் டிசம்பர் முப்பதுக்கு முதல் சிம்பிளாக முடிக்க கூடிய ஏதும் சிக்குமா என்று தேடிக்கொண்டே இருந்தேன். போன வருஷம் மனதில் இருந்த கதை ஒன்று ஞாபகம் வந்து விட்டது. ஆகவே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் டெய்லி பதிவுகளில் இரவுகளில் வரும். 31/12/ 2020 முன்னர் முடித்து விடுவேன். Don't Worry!

இந்த சைட்டில் அப்டேட்டுகள், என்னுடைய உளறல்களை தவிர எதுவும் இருக்காது. என்னை பொறுத்தவரை என்னுடைய ப்ளாக்கும் பேஜும் எனக்கான comfort zone ஆக இருந்தது. ஆனால் என்னுடைய பேஜில் இப்போதெல்லாம் அந்த உணர்வு வரமாட்டேன் என்கிறது. அங்கே பேசும் போது ஆயிரம் கண்கள் என்னை மதிப்பிட்டு கொண்டு இருப்பதை போல உணர்வு வருகிறது. அங்கே போஸ்ட் செய்யா விட்டால் பலரை சென்றடையாது தான், புரிகிறது ஆனால் நான் நானாக comfort ஆக இருப்பது எல்லாவற்றையும் விட முக்கியம் என்று நினைக்கிறேன். ஆகவே முதல் தடவையாக போஸ்ட் செய்வதனால் உங்களுக்கு நான் பேஸ்புக் பக்கத்தில் அறிவித்தல் கொடுத்தேன். மற்றபடிக்கு ஒவ்வொரு பதிவும் அங்கே லிங்க் கொடுக்க மாட்டேன். தயவு செய்து புரிந்து கொண்டு  என்னை தொடர விரும்பினால் இங்கே follow செய்யுங்கள். 

என் வாசகர்களுக்கு 

நீங்களும் இங்கே உங்கள் வீட்டில் இருக்கும் சௌகர்யத்துடன் வந்து போக முடியவேண்டும்  என்று தான் இந்த பெயரே வைத்தேன். ஆக தயங்காமல் என்னை திட்டலாம், 

பாராட்டுக்கள் மட்டுமே சொல்வது ஒரு வழி தொடர்பாடல் மக்களே.. உங்கள் கருத்தை ஓபன் ஆக சொல்லுங்கள். என்னுடைய கதைகளுக்கு என்னை விட மோசமான, கறாரான  விமர்சகராக உங்களால் இருந்து விடவே முடியாது.

நான் இங்கே மட்டும் இயங்குவது , மற்றும் பொது வெளியில் இயங்காமலிருப்பது நீங்கள் என்னை தொடர்பு கொள்வது பிடிக்காமல் இல்லை என்பதை தயவு செய்து மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை முகப்புத்தகம் வழியாகவோ, ஈமெயில் வழியாகவோ தயங்காமல் அணுகலாம்.  இடைப்பட்ட காலத்தில் பல வாசகிகள் அப்படி நினைத்ததாக சொன்னார்கள். :D 

என் ஈமெயில் முகவரி : ushanthygowthaman@gmail.com

அப்புறம்வேறென்ன? 

I love you all மக்களே... உங்களுடனான இடையீடுகளை ரொம்பவும் மிஸ் செய்தேன்.

அகம் முழுக்கதை

 ஹாய் மக்கள்ஸ்..  இங்கே அகம் முழுக்கதையை படிக்கலாம்.  https://drive.google.com/file/d/1F2OeFSh-OyvsYKjmqq8N1BVfpVGPYWTm/view?usp=sharing இரண...