Thursday, December 31, 2020

Heart to heart

 ஹாய் மக்களே..

2021 பிறக்க எங்களுக்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கிறது. இந்த வருஷம் ரொம்பவே மாறுபட்ட, கஷ்டமான, சில புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திய, சில கதவுகளை பூட்டி, சில கதவுகளை திறந்த வருஷமாக இருந்தது.

அடுத்தது என்ன என்ற நிச்சயமில்லாத நிலை இன்னும் கேள்விக்குறியாகத்தான் நின்று கொண்டிருந்தாலும் நாளை நல்லதை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டு செல்ல வைக்கிறது.

நான் ஒரு வருஷமாக இந்தப்பக்கமே எட்டிப்பார்க்கவில்லை, என்னதான் வாழ்க்கையின் மற்றப்பக்கங்கள் எல்லாம் நிற்காமல் ஓடினாலும் எனக்குள் ஒருபக்கம் மட்டும் புரட்டப்படாமலே இருந்தது. நான் எழுதுவதையும் உங்களோடு பேசுவதையும் மிஸ் செய்தேன். நேரம் இல்லாமல் நான் இந்தப்பக்கம் வராமல் இருக்கவில்லை மக்களே.. நான் எத்தனையோ நாவல்கள் ஆரம்பித்தேன்..ஒவ்வொரு மாதமும் எதையோ எழுதிக்கொண்டு தான் இருந்தேன். ஒரு பதினைந்துக்கு கிட்ட இருக்கும். எதுவுமே ஐந்து பகுதிகளை தாண்டவே இல்லை..போஸ்ட் பண்ணாமலே தூக்கி போட்டுவிட்டேன். அவ்வளவு நேரத்தை வேஸ்ட் பண்ணி எழுதியும் எதுவும் சரி வரவில்லை என்ற மனக்கஷ்டம் வேறு..  ஒரு கட்டத்தில் நினைத்தேன், சரி நமக்கு சரக்கு தீர்ந்து விட்டது போலிருக்கிறது. இனிமேல் நானும் ஒரு கட்டத்தில் எழுதினேன் என்று சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் என்றே நினைத்து விட்டேன். 

எதையும் பார்க்க பிடிக்கவில்லை. பேஜை மியூட்டில் போட்டு, என் சைட் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அதனால் ரினியூவல் நோட்டிபிக்கேஷன் வந்ததையும் பார்க்கவில்லை.  சைட் என் பழைய டிராப்ட்களோடு தூக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல லாப்டாப்பின் மீது படுத்து தூங்கி அதையும் உடைத்து புதிது வாங்கியாயிற்று. ஆக எழுதியவை ஏதும் என் கையில் இல்லாமல் ரெண்டு மாசம் சுற்றிக்கொண்டிருந்தேன். என் தொழில் வாழ்க்கை நாளைக்கே புதிதாக மாறும். ஆனால் என் எழுத்து என்னோடு கூடவே வளர்ந்தது. அதை தொலைத்து விட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு வேளை பல விஷயங்கள் மனதை போட்டு உடைத்துக்கொண்டிருந்ததோ அதனால் தான் என்னால் கதையில் ஒன்ற முடியவில்லையோ தெரியவில்லை

நவம்பர் மாசம் COVID உபயத்தில்  வீட்டில் இரண்டு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆக மொத்தம் மூன்று வாரங்கள். பதினெட்டு வயதுக்கு பின் என் அம்மா அப்பாவோடு நான் செலவழித்த ஆகக்கூடிய காலம் அது தான்.  இல்லாவிட்டால் ஆகக்கூடியது ஒரு வாரம் தான் கிடைக்கும். அந்த நேரம் தான் ஏதோ ஒரு Juke box இல் சட்டென்று ஒரு பாடல் பாட ஆரம்பித்தது. கொஞ்சம் பழைய பாடல் தான். ஆனால் நான் அப்போது தான் புதிதாய் கேட்டேன்... மனதுக்குள் எதுவோ கிளிக் ஆனது. இனிமேல் போஸ்ட் செய்துவிட்டு பாதியில் நிறுத்தினால் அதை விட அவமானம் வேறொன்றுமில்லை. ஆக என் அன்பர்கள் நீ முடிப்பாய் என்று நம்பினால் மட்டும் போஸ்ட் செய்ய சொன்னார்கள். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை நான் சொன்னேன்.. ஒரே ஒரு முயற்சி பண்ணி பார்க்கிறேன். இத்தோடு இதில் நான் நேரத்தை வேஸ்ட் செய்ய மாட்டேன் என்று.. அப்படி தான் கண்மணி பிறந்தாள்.

எப்போதுமே நான் முழுக்கதையை யோசித்துக்கொண்டு ஆரம்பிப்பதில்லை..குருட்டு நம்பிக்கையில் போஸ்ட் செய்தேன்.. நானே கையில் வைத்துக்கொண்டு திரும்ப திரும்ப வாசிப்பதால் தான் அந்த கதை போரடித்து போய் தொடர முடியாமல் போகிறது என்று ஒரு சந்தேகம் வேறு. சரி. அட்லீஸ்ட் ஒரு பத்து பேராவது தொடர்ந்து படிப்பார்கள் தானே..அவர்கள் சொல்வதில் இருந்து நான் கதையை ஜட்ஜ் பண்ணி கொள்வேன் என்று தான் ஆரம்பித்தேன். இருபத்திநான்கு மணிநேரமும் என் வீட்டில் ஒரு ப்ளே லிஸ்ட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. என்னை plot இலேயே பிடித்து வைக்கவாம் ஹி ஹி 

facebook page என்னுடைய  comfort zone இல்லை நிச்சயமாக...அதுவும் இப்படிப்பட்ட மனநிலையில் அங்கே என்னால் எதுவும் பேச முடியாது. அங்கே ப்ரொமோட் செய்யவும் முடியாது. கதையை முடித்த பிறகு எனக்கு திருப்தியாய் எடிட் பண்ணியபிறகு அங்கே போஸ்ட் பண்ணுகிறேன். அதை தவிர கொஞ்சம் பேருக்கு மட்டும் காண்பித்து விட்டு புக் ஆக்கி பணம் பண்ணும் எண்ணம் எனக்கு கிடையாது. உலகின் ஆக மோசமான introvert நான். என்னைப்போய் ஒரு impromptu ஸ்பீச்சை தெரியாதவர்கள் முன்னே செய்ய சொன்னால் எப்படி இருக்கும்? அதே மனநிலை தான் இப்போது நான் page ஐ தவிர்த்ததற்கும் காரணம் ..வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் கதையை முடித்ததும் அங்கே கொடுக்காமல் கிண்டிலில் போடமாட்டேன். Don't worry.

நேற்று கதையை எடிட் செய்ய போகிறேன் என்று சொல்லிவிட்டு நானே ரொம்ப வருத்தப்பட்டேன். இப்போது படித்து வருபவர்களால் தான் இந்தக்கதையே சாத்தியமானது. அப்படியிருக்க அவர்களை விட்டுவிட்டு வேறு யாருக்கு நான் சிறப்பாக எடிட் பண்ணி கொடுக்க போகிறேன்? அவசரப்பட்டு போஸ்ட் செய்வது என் பிரச்சனை அதை வாசகர்களாகிய உங்களிடம் எடுத்துக்கொண்டு போனது ரொம்பவே தவறு. எதை செய்யவேண்டுமென்றாலும் அதை இப்போது படித்து என்னை தொடர்ந்து எழுத வைப்பவர்களுக்காக தானே செய்யவேண்டும் ? மன்னிக்கவும்!இனிவரும் அத்தியாயங்கள் எடிட் பண்ண தேவையிருக்காது :) என்னோடு சேர்ந்து  இந்த நாவலோடு பயணித்த அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும் போல தோன்றியது. நான் எப்போதுமே பொது வெளியில் என் சொந்த உணர்வுகளை பேசியது கிடையாது. ஆனால் இந்த தளம் எனக்கு சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருவதால் மட்டும் இந்த லாங் போஸ்ட். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்த வருஷம் நாவல் மட்டும் இல்லாமல் நிறைய விஷயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம் :)

கதையில் மூன்று அத்தியாயங்கள் எடிட் பண்ண இருக்கிறது.  அதை புதுவருடம் பிறந்ததும் போட எனக்கு மனசு வரவில்லை. சனிக்கிழமை போஸ்ட் செய்கிறேன் மக்களே.. மூன்று எபிசோட்கள் சேர்த்து. சரியா? ஏன் என்பதை சனிக்கிழமை புரிந்து கொள்வீர்கள். 😓 நான் எந்த புள்ளியில் இந்த கதையை ஆரம்பித்தேன் என்பதே இந்த பதினைந்தாவது எபிசோடில் தான் ஆரம்பிக்கிறது. சனிக்கிழமை சந்திப்போம்..

மீண்டும் உங்களுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப  நன்றி..உங்கள் எல்லாருக்கும் இந்த வருடம் சகல சந்தோஷங்களையும் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

அப்புறம் ஒரு song கேட்டு தான் இந்த கதையை ஆரம்பித்தேன் என்று சொன்னேனே..கீழே கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.. அந்த வரிகளை கேட்டால் நீங்களே குழம்பிப்போவீர்கள்.. இந்த songக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் அதிலிருந்து இதை எப்படி கண்டு பிடித்தேன் என்று எனக்கு தெரியாது.. but I just did I guess..



Happy New Year and Thank You once again makkale
 

24 comments:

  1. May you be surrounded by your kind of happiness and happy souls too sago.
    மகிழ்ந்திருப்போம்.. HAPPIEST 2021 to you too <3

    PS : Saturday vandhravum marakaama.. commit aagiteenga, aamam.

    ReplyDelete
    Replies
    1. Thank you ungalukum uriththagattum
      naan vanten..neenga vanteengalaa?

      Delete
  2. Happieeeeeee new year sis !

    இது தான் முதல் முறை உங்களது கதையை தொடர்கதையாகப் படிப்பது. Blog ல் கருத்து பதிவிடுவதும் இந்தக் கதைக்கு தான். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வரம் தேடும் தேவதை கதை மூலமாக நீங்கள் எனக்கு அறிமுகமாகிவிட்டீர்கள். இதுவரை எத்தனையோ முறை கதைகளைத் திரும்பத் திரும்ப படித்தாயிற்று. ஆனால் கொஞ்சமும் சலிக்கவில்லை. அது தான் உங்களுடைய எழுத்தின் தனித்துவம் ! நியதிக்குப் பிறகாக எதையும் படிக்காத காலத்தில் உங்க எழுத்தை எவ்வளவோ மிஸ் செய்தேன். அது எந்த அளவு என்பது இந்தக் கதையை படிக்கும் போது தான் தெரிகிறது. Missed u sooooooo much ! ஆனால் இடையிலான காலம் உங்களுக்கும் கொஞ்சம் போராட்டமாகவே இருந்திருக்கிறது. போனது போகட்டும்.
    இனி எழுதும் கதைகளை எப்போதும் போல உற்சாகமாக நிறைவாக எங்களுக்குத் தர வாழ்த்துக்கள் சிஸ் ! வருடத்திற்கு இரு கதைகளாவது வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள் ♥️♥️♥️

    ReplyDelete
    Replies
    1. Thank you sooo much. I missed you guys too . i will try to do that. kandippaa :) <3 <3

      Delete
  3. The fire is on fire ♡♡♡
    Waiting
    Happy new year ka

    ReplyDelete
  4. This story is so refreshing and please continue to write.

    Also, your old wordpress blog is still accessible for me :O

    Happy new year! Stay blessed! :)

    ReplyDelete
    Replies
    1. awww.. Tell me this after reading the last three epis :( :(
      Yeah my brother did it to meeeeee. now i have two blogs for no reason :D
      Happieee New Year!

      Delete
  5. Happy new year dear.. you are good as always.. don't mess up your mind.. be calm.. you have your own style of writing and I love all of them. All of your stories are in my Kindle and I read atleast once in two months. Anbulla ethiri, meelatho en vasantham, itho itho en pallavi, srilankan boy and Tamil girl love story (sorry forgot the name) everything is in my favourite list.. loves you for everything you have written and not written. Don't pressures yourself dear ♥️

    ReplyDelete
    Replies
    1. Thank you and wishing you the same Induja <3 <3 thanks for the love

      Delete
  6. Happy happy new year Uchu. 🥰 Glad you finally came out of the block with this beautiful story with deep insights strewn all over. Love is not just revealing our strengths, it's more about laying bare our weakness and insecurities too. Waiting for akshus vulnerabilities to be unfolded by Abhi. Poor akshu she is hard on herself and want to read more of cutie Swara and how everything is going to work out. So happy uchu you are able to pull this off so well and I know you would do a gr8 job in dealing with all the intricacies involved in these difficult relationships further. Parenting is so tough as it is and if separation is involved it's not easy on any of the parties involved. What makes your writing special is it isn't shallow. This subject is not easy to write at all. You are doing a splendid job and making it an interesting read as well. Best wishes dear

    ReplyDelete
    Replies
    1. I hope you will be able to say the same thing once you finish reading the last three episodes <3 Thank you very much sissy <3 <3

      Delete
  7. Happy New Year 🤩 May the New Year 2021 bring you more happiness, success, love and blessings...😍

    ReplyDelete
  8. Let this year brings you more happiness and good health.we'll be eagerly waiting for your more stories .and happy to read your feelings through your lines.stay blessed.

    ReplyDelete
  9. மிக அழகான எழுத்து உஷிமா உங்களது, அமைதியான நதியோடு இயைந்து பயணிக்கும் படகின் மனநிலை தருவது , சந்தேகமே இல்லாமல், படிப்பவர்களை பல புரிதல்களுக்கு இட்டுச் செல்வது.
    அருமைடா.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ushanthy அக்கா💐🤗...உங்கள் எழுத்துக்கள் எப்பொழுதும் Saturday evening vacation mood thara தவறியதே இல்லை ..என்றும் புத்துணர்ச்சி ஊட்டு பவை உங்கள் எழுத்துக்கள் அக்கா🤗

    ReplyDelete
    Replies
    1. Thank you so much <3 ungalukum ! thanks da <3 <3

      Delete

அகம் முழுக்கதை

 ஹாய் மக்கள்ஸ்..  இங்கே அகம் முழுக்கதையை படிக்கலாம்.  https://drive.google.com/file/d/1F2OeFSh-OyvsYKjmqq8N1BVfpVGPYWTm/view?usp=sharing இரண...