Friday, March 12, 2021

ஹரி


நான் சொல்வது தான் கதை என்று இருந்து விட முடிவதில்லை மக்களே. அது உங்களை எப்படி தாக்குகிறது  என்பதில் தான் எனக்கு  திருப்தி கிடைக்கிறதா இல்லையா என்பதே தங்கியிருக்கிறது. கடந்த அத்தியாயத்தால் எனக்கு இவ்வளவு குற்ற உணர்ச்சி வரும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த கதையை தொட்டிருக்கவே மாட்டேன் 

வாசகரை சந்தோஷமாக செய்வது மட்டும் தான் என் நோக்கம். எப்போதுமே..  

போன வருஷம் நான் Jaffna போயிருந்த போது ஒரு விஷயத்தை நேரடியாக பார்த்தேன் . அங்கே வீதி விபத்துக்கள் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கும். அனேகமாக எல்லாம் பைக் ஆக்சிடென்ட்கள் தான் :(  நான் போன நேரம் நானும் மனதளவில் கொஞ்சம் டவுன் ஆகதான்இருந்தேன். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து ஒரு யூனிவர்சிட்டி பையன். எங்கே பார்த்தாலும் போஸ்டர்கள். ஒரு மாதிரியாக இருந்தது ஊரே. என் தம்பிக்கும் அந்த பையனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை, அறிமுகமும் இல்லை. ஆனால் அன்றிரவு முழுக்க அவனை பற்றி தான் பேசிக்கொண்டிருந்தான். Social media முழுக்க அவன் படம் தான். நிறைய பாதித்தது என் மனதை. இவ்வளவு பேரை அவன் பாதித்திருக்கிறான் என்றால் அந்த குட்டி வாழ்க்கையை அவன் நிறைவாக வாழ்ந்திருந்தால் மட்டும் தானே முடியும். 

அவனது நெருங்கிய நண்பர்கள் எப்படி உணர்வார்கள்? யூனிவர்சிட்டி காலம் இளைஞர்கள் எல்லாவற்றையும் புதிதாக கண்டு பெரியவர்களாக மாறும் காலம். சக நண்பனின் இழப்பு நாம் முதல் தடவையாக நமக்கென்று சம்பாதித்த மனிதனின் இழப்பாய் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும். நாம் ஒவ்வொருவருமே பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது இப்படி ஒரு சம்பவமாவது நடந்திருக்கும். நமக்கு தெரியாத நபர்களாக இருந்தாலும் அழுதிருப்போம். எப்போதுமே நினைவில் இருக்கும் அது.. 

ரிதமின் அடிநாதமே இரண்டு இளைஞர்கள், ஒருவரில் ஒருவர் ஆறுதல் கண்டவர்கள்... அதில் ஒருவன் துரதிஷ்ட வசமாக இல்லாமல் ஆகிவிடுகிறான். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த மற்றவன்  மொத்தமாக உடைந்து விலகிசென்று விடுகிறான். அங்கே யார் எப்படி அவனுக்கு உதவினர் . அவன் எப்படி மீண்டான் என்று தான் சொல்ல நினைத்தேன். 

இது ரிதம் .. அந்த "ரி " அதில் எப்போதுமே ஹரி இருப்பான். "ம்" யாரென்று உங்களுக்கு சொல்லதேவையில்லை. தான்வி, தாரிணி ரெண்டு பேரும் தான் அந்த "த"

ஹரிவர்த்தன் 😇💓என்னுடைய ஏஞ்சல் அவன். அந்த சம்பவங்கள் வரும் FB ஐ நான் ஒரு நரேட்டிவ் மோடில் கடக்க நினைத்தேன். அப்படியானால் அவன் இவ்வளவு தூரம் உங்களை தாக்க மாட்டான் என்று நினைத்தேன். ஆனால் அது உயிர்ப்பாகவே இல்லை. விக்ரமைபுரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவனுக்கு எவ்வளவு தாக்கம்இருக்கும் என்று வாசகர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதே தான் தானுவுக்கும். என்னதான் நடத்தையில் ஒருவன் நேசத்தை காண்பித்திருந்தாலும் அவர்கள் கமிட் ஆகியிருக்காத நிலையில் வலுவான காரணம் இன்றி மறைந்து போன ஒருவனை தேடி எந்த பெண்ணும் போக மாட்டாள். காதலில் சுய மரியாதை முக்கியம். 

ஆக தவிர்க்க முடியாமல் தான் அந்த முடிவை கொடுக்க வேண்டி வந்தது. இறுதி நொடியும் ஹரி தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான இருவரோடும் தான் இருந்தான். அவன் சந்தோஷமாக விடை பெற்று சென்றதாக எடுத்துக்கொள்வோம். Sorry மக்களே

சரி. சிலர் இப்படி செய்திருக்கலாமே..ஏன் இந்த முடிவுக்கு போனீர்கள் என்று கேட்டிருந்தீர்கள். இன்பாக்ஸில் கிழியோ கிழி வாங்கினேன். சிலரிடம் ;) அவையெல்லாம் கதைக்கு பொருத்தமாக இருந்திருந்தால் நானே வைத்திருப்பேனே..

1. அட்லீஸ்ட் அவனுக்கு கோமா ஆகியிருக்கலாம் 

ஹரிக்கு கோமா ஆகியிருந்தால் விக்கியும் ப்ரதியும் இருவரின் குணத்துக்கும் அவனை விட்டு விலகியேஇருந்திருக்க மாட்டார்கள். எல்லார் வாழ்க்கையும் அங்கேயே  ஸ்தம்பித்து நின்றிருக்கும். திடீரென அவன் கண்விழித்து நான் யார் என்று கேட்டு சுபமாவதெல்லாம் ரொம்பவே dramatic. அவன் கண்விழிக்காமலே இருந்தால் அதை விட கொடுமையை அவனுக்கு நான் செய்து விட முடியாது. 

3. அப்பா அம்மா விரும்பாததால் Break up பண்ணியதாக காட்டியிருக்கலாம்

கமிட் ஆகி விட்டு அதன் பிறகு அது எப்பேர்ப்பட்ட காரணம் ஆயினும் ப்ரேக் அப் செய்யும் காரக்டர் ரொம்பவே weak ஆனது. அப்படியானால் காதலே ஒரு மிஸ்டேக் என்று தான் எடுக்க வேண்டும். ஹரியை நான் அப்படி உருவாக்கவில்லை. அவன் அந்த சின்ன வயதிலேயே பெற்றோரை எதிர்த்து விக்கிக்காக testimony கொடுத்தவன். அப்படிப்பட்டவன் அவர்கள் ஏற்கவில்லை என்று இந்த வயதில் ப்ரேக் அப் பண்ணுவது நடக்குமா? மற்றப்பக்கம் ப்ரதி அவள் ஐநூறு பேருக்கு முன்னே எழுந்து நின்று தானுவுக்காக தனியே சண்டை போட்டவள் அவளா பயப்பட்டு ப்ரேக் அப் பண்ணுவாள்? அது சாத்தியமே இல்லை.

காயங்கள் என்றும் ரணமாகவே இருந்து விடுவதில்லை மக்களே

சரியான மருந்து கிட்டும் போது ஆறி விடும். ஆனால் தழும்புகள் நம்மோடு கூடவே தான் வரும். சில தழும்புகள்இனிமையான நினைவுகளை மட்டும் தான் மீள நினைவு படுத்தும் . என் ஹரியும் அப்படித்தான்.  மற்ற மூவரும் அவனை குறித்த இனிமையான நினைவுகளை தான் சுமந்து செல்லப் போகிறார்கள்.

உங்கள் மனதை வருத்த படுத்தியிருந்தால் ரொம்பவே சாரி.  

ரிதம் ரொம்பவே இனிமையானது தான்.. என் மீது நம்பிக்கை வைக்கலாம் நீங்கள். தொடர்ந்து வாங்க. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.  

இது வரை தானு மட்டும் தான் கிட்டத்தட்ட வற்புறுத்தி அவனோடு தன்னை சேர்த்துக் கொண்டிருந்தாள். என்னதான் எவ்வளவு பெரிய அடி ஆனாலும் அவன் அந்த பெண்ணை நினைத்து பார்த்திருக்க வேண்டும். தன்னந்தனியே அவனது விலகலோடு, காதல் தோல்வி, உடைந்து நின்ற நண்பி என்று எத்தனையோ விஷயங்களை தனியாக கடந்திருக்கிறாள். இவன் நாலு வருஷம் கழித்து ஒன்றுமே நடவாதது போல திரும்பி வந்து விட்டால் அதெல்லாம் சரியாகி விடாது தானே.. 

அவர்கள் இருவரும் என்ன ஆகிறார்கள் என்று பார்க்கலாம். கூடவே ப்ரதியும் 

நன்றி...


4 comments:

  1. Anushya VijayakumarMarch 12, 2021 at 5:42 PM

    Ala yithutenga usha.hari ku nadantha vedayathai jeranika mudiyalla.viki ean ipadi pona.kalangal kayaththai marakka yikum

    ReplyDelete
  2. This made my day. This also filled my eyes but in a better way. அந்த குட்டி வாழ்க்கையை அவன் எப்படி வாழ்ந்திருந்தால் இப்படியான பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஹரி என்றாலே உயிர்ப்பு தானே he ll there always

    ReplyDelete
  3. Yes கரெக்ட்டான ரூட்ல தான் தல போறீங்க அப்டியே போங்க ஹரி ஏஞ்சல் தான் எப்பவும்

    ReplyDelete
  4. வணக்கம்..வணக்கம்.....
    Oru periya hug ungaluku for the sweet reply from you for the comment I'd left behind earlier.
    'கதையை சேர்த்து வைத்து படிக்க போறோம்,so நிறைய இருக்கும் jollyyeee'ங்கற my mindset அழகான கதையோடயும் amazing கதாப்பாத்திரங்களோடயும் அப்படியே chillax modeலயே travel பண்ணிக்டிருந்துசா, அதான்,last ud la 'liteஆ ஒரு periya jerk, ORU chinna சுருக்'appadi feel ஆகிருச்சு..(FYI- don't worry...only that event was a disappointment , but the story will never be so (for none))
    இந்த கதையோட அழகு inum inum continue ஆகத்தானே போகுது....so, I'm waitinggggg!
    'ஏன் 'ரிதம்'??'அப்படீனு ஓடிக்டிருந்த my ques.markஐ உங்க பக்கமிருந்து வந்த explanation post fullstop ஆக்கிருச்சு!!yayyy

    Waiting for Vikram's reentry...
    (kadhaila bit bitaa flashbacks endra kosuvaththi surulgalai sutraamal ipadi aval kaathiruppin end pointkkum avan reentrykum inbetween nu kondu porardhu bravo..seriously wow!!)

    "பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் ,
    காணாத கண்களை காண வந்தாள்
    பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் ,
    பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
    பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்...."

    இப்படித்தானே இருக்கும் தான்விக்கான விக்ரமுடைய feelingssss???!!!
    Enakku indha varigal dhan bgmஆ odudhu avanga partsலலாம் from the time Vikram started expressing his emotions and life towards her!!!

    Kalakrel...continue.. kaathudungrukom naango :D

    Michchamaa, meedhamaa indha naadagam??
    Vikky ey vikky ey vaa vaa vaa....

    ReplyDelete

அகம் முழுக்கதை

 ஹாய் மக்கள்ஸ்..  இங்கே அகம் முழுக்கதையை படிக்கலாம்.  https://drive.google.com/file/d/1F2OeFSh-OyvsYKjmqq8N1BVfpVGPYWTm/view?usp=sharing இரண...