Thursday, March 23, 2023

ஒகே .. கேள்விக்கு பதில்

  • I'm just a reader. So writer kum enakum karuthu verupaadungal irukum bodhum, 'idhu ezhuthaalar ipdi kondu poganum nu nenachirukanga, avangaloda ishtam' nu nenachipen. Elaarum orey madri yosichiktu irundha bore thaangadhey! Adhanaaleye, indha madri doubts & comments kuduka maaten. But this time, 'agam' ezhuthaalare avangalai patriyum, avanga ezhuthu nadai + genre patriyum aaivil eedu pattirupadhai pola thonudhu. Adhan ketka poren.
    Indha episode la enaku ketka nenacha vishayam aanadhu - Ruhi ya andha meeting la corner seiya pattu "un maanavargalukum idhaya soli tharuva?" nu kelvi ketkapadum bodhu, Yudhi en "vaa polam" nu kootitu vandhranum? Avanuku avargal ivanal dhan avalai verupethraanga nu theriyudhu. Ivalukum avargalai kaiyaala thiramai iruku num theriyudhu. Aama, andha nimisham ava udanji poita dhan, aarudhal thedi irupaalum dhan. Ivan kuda poi ninnirukalamey, 'nee enna ninaikriyo solli mudi, neeya ivangaluk fullstop vechitu vaa, naan iruken' nu pakkathula ninnu avalaye situation handle panna vitrukalame. Or, 'iruka pidikalaya/mudiyalaya, appo polama?' nu ketutu aachum avala kootitu vandhrukalamo.. nu thonuchu enaku. Coz, 'அவளுக்கு எதுவும் புரியவில்லை. இரண்டு முறை இமை தட்டி விழித்தவள் அவனை பின்தொடர்ந்தாள்' la Ruhi ya weak aakiteengalo nu thonuchu, ivanoda rescue ku pinaadi!


  • Ruhi- Yudhi challenge la ivanoda kelvi ku dhane aval 45 days la badhil kudupan nu sonaan. Inga, though avalai soozhndhirundha gumbal, kita thatta Yudhi initialaa iva genre aa kalaicha madri dhan kelvi ketkuranga naalum, idhuvum adhuvum onnilaye.. ava epdi respond pani irupaalo! She is someone who knows how to handle stuff like this nu enaku thonuchu.. adhan keten.

    PS- Naan soli irukum + ketiruppavai elaamey en 'thonuchu'galin adiapadaiyil. So, unga side la reasons irukum. Adhu vechu idhelam thappa kuda irukalam. If so, looseil vidavum


  •  

    நீங்க இந்த கேள்வி கேட்டது சந்தோஷமா இருக்கு நிஜமா.. இந்த சீன் ரெண்டு மாதிரி மனசுல இருந்தது. முதல் வர்ஷன் தான் நேற்று வரை இருந்தது..எழுதும் போது வந்தது தான் நீங்க படிச்சது. 


    முதல்ல அங்கே அவங்க கார்னர் பண்ணியதும் அவ சீரியஸா சண்டை போட்டுட்டு யுதியையும் கிழிச்சிட்டு போற மாதிரி தான் வச்சிருந்தேன். பிறகு எழுதிக்கொண்டிருக்கும் போது என் மனசுல வேற வந்தது..


    ஏன் மாற்றினேன்? கொஞ்சம் பெரிய ....ய பதில்


    முதலாவது அவனுமே அந்த க்ரூப்பை சேர்ந்தவன்.. ஹி லவ்ஸ் ஹேர். அவளை மட்டும் தான் சப்போர்ட் பண்ணுவானா? இல்லை அவளை மாதிரி இருக்கிற எல்லாரையுமே சப்போர்ட் பண்ணுவானா என்பது அவனுக்கும் தெரியாது. எங்களுக்கும் தெரியாது.  இவள் மூலமா இனிமேல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாரையும் ஜட்ஜ் பண்ணாம  ஏற்றுகொள்வான் என்று தான் நினைக்கிறேன். தருணி விஷயம் ஒரு உதாரணம்.


    இரண்டாவது ரூஹிகூட அவங்க சண்டை போட்டது அவ காதல் நாவல்கள் எழுதுற பெண் என்பதால் இல்லை. யுதி அதை நினைப்பான். அவள் மேல் அவ்வளவு கோபம் அவளால் தான் குரு சிஷ்யன் பிரிஞ்சு அவங்க க்ரூப் உடைஞ்சதுன்னு கோபம். அதை எப்படியாவது அவகிட்ட காட்டணும். 


    மூன்றாவது அவளுக்கு பயமில்லை. அவ செவ்வேல் கிட்டயே அவருடைய கதாப்பாத்திரம் நடைமுறை சாத்தியம் இல்லைன்னு அவ்வளவு பேர் முன்னாடி சொன்னா. அவ ஒரு prof. அந்த பாலன்ஸ் அவட்ட இருக்கு. யுதி சொல்வானே.. எழுத்தாளினி பயந்தாங்கொள்ளி prof கிழிச்சு தொங்க விட்டிருவான்னு. அவ அங்கே வரும் போது ரொம்ப ரொம்ப இன்செக்கியூர்ட்டா இருந்தா. அதுதான் இயல்பும். எங்களையெல்லாம் அந்த க்ரூப் எவ்வளவு கேவலமா பேசுவாங்க மதிப்பாங்கன்னு உங்களுக்கு தெரியாது. நான் ஒரு பெரிய எழுத்தாளரின் விசிறி. அவருக்கு நான் எழுதுவேன்னு இது வரைக்கும் தெரியாது.  கடைசி வரை எனக்கு இன்னொரு முகம் இருக்குன்னு வெளிப்படுத்த இந்த நொடி வரை தைரியம் வரல. அசிங்கப்படுத்திடுவாங்க, அவர் இல்லாவிட்டாலும் அவரோட க்ரூப் பத்தி பயம் இருக்கு. யுதியும் அங்கே வந்ததும் அவளே அடையாளத்தை சூஸ் பண்ணட்டும்னு தான் விட்டான். அவளும் ப்ரோபெசர் என்று மட்டும் தான் தன்னை அடையாளப்படுத்தினா. அதோட ப்ரபெசரா தான் அவங்களை அவ எதிர்த்து நின்னதுமே..


    அவ்வளவு நேரம் ஸ்ட்ராங்கா இருந்தவ.. அவளை நேரடியா ஒரு ரைட்டரா நிறுத்தி நீ எழுதுற புத்தகங்கள் இப்படித்தானேன்னு கேட்டப்போ. உங்களுக்கு புரியலையான்னு கேட்பா.. அவளோட வாய்ஸ் ப்ரேக் ஆகும்..அது அவளோட Insecurity as a writer வெளியே வந்த இடம். ஸ்டூடன்ட்ஸ் பத்தி பேச்சு வரும் போது it was questioning her integrity as a prof. Professional ethics ஐ கேள்வி கேட்கும் இடம். உடைஞ்சிட்டா..teared up. இந்த இடத்துக்கு முன்னாடி இடத்தில்  ரூஹியோட கோணத்தில் கதை வரும் போது நான் இதுக்கு ஒரு ரெபரன்ஸ் வச்சிருந்தேன். யுதி ஸ்டூடன்ஸ் பற்றி இழுத்து ஏதோ பேசின போது அவ இதே போல   அப்செட் ஆனா..காட்டிக்கலை. 

     

    இவன் அவளை தெளிவா புரிஞ்சு வச்சிருந்தான். he is a very good observer.ரூஹிக்கு நம்ம ஏன் இப்படி மூர்க்கத்தனமா தாக்கப்படுறோம்னு புரிஞ்சிருக்காது. அது தான் அவ கண்பியூஸ்டா அவன் பின்னாடி போனது. ஆனா அவனுக்கு தெரியும். அது யுதி- செவ்வேல் பிரச்சனையோட நீட்சின்னு. ஆக அங்கே அவ என்ன பதில் சொன்னாலும் அது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் பதில் எதிர்பார்த்து அவளிடம் அந்த கேள்விகள் கேட்கப்படவில்லை. இரண்டாவது அவனே அவ ஏன் இதை பண்றான்னு தெரிஞ்சுக்க தான் அவ பின்னாடி வந்தான். சவாலும் விட்டான். ஆனா அவன் அந்த இடத்துல நினைப்பான். இட் டசன்ட் மாட்டர். அவன் அதை கேட்க விரும்பல..அது அவனுக்கு தேவையும் இல்லை. அவளை அவளா அவன் ஆக்செப்ட் பண்ணி ரொம்ப நாள் ஆகுதுன்னு அவன் ரியலைஸ் பண்ணின இடம் அது. அந்த இடத்துல அவ பேசறதை இவன் கேட்டு காரணம் தெரிஞ்சு... அதுக்கு பின்னாடி ஆக்செப்ட் பண்ணனுமா? புதுசா ஒண்ணும் அவ சொல்லப்போறதில்லை.அவளோட பழகின நாட்கள்ல பிட்ஸ் அண்ட் பீசஸ் ஆ அவ சொல்லிட்டா அவளுக்கு தெரியாமலே.. பாஷன்,, அந்த ஓட்டம், உள்ளே இருக்கறதா வெளியே கொண்டே வந்தாகணும்ன்ற துரத்தல்கள்..ஆடியன்சோட வர்ற பான்ட்.. எல்லாத்தையும் விட அவ சப்ஜெக்ட் மாட்டர் எக்ஸ்பர்ட்டாவும் அதை பத்தி அந்த டிராமா நைட்ல வச்சு சொல்லிட்டா... 


    அவனோட ரூச்சி, அவ என்ன பதில் சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் பாயப்போகும் மினியன்களுக்கு நின்று பதில் சொல்ல அவன் பார்த்துக்கொண்டு நிற்பானா?


    அடுத்தது அவளை நான் அங்கே பேசவிடாததுக்கு ரீசன். ஒரு கலைஞனிடம் ஏன் நீ இந்த கலையை படைக்கிறாய் என்ற கேள்வியை கேட்கும் இடத்தில் எந்த மனுஷனுமே இல்லை.. கலையை மதிப்பிடலாம், திட்டலாம், கொண்டாடலாம். படைக்கும் ப்ராசஸ்..ரியலி ரியலி இன்டிமேட்.. ஒவ்வொருத்தருக்கும் பர்சனலானது. அதை கேள்வி கேட்க மற்றவர்கள் யார்? ஒருவர் மனதில் இருப்பது எது என்றாலும் அதை வெளிப்படுத்தும் பாதுகாப்பான ஸ்பேசை கொடுப்பது எங்கள் ஒவ்வொருவரதும் கடமை..அதை தான் யுதி தருணிக்கு செஞ்சான். ரூஹியோட fan fiction friend கு இவ சப்போர்ட் பண்ணுவா.. 


    இப்படி பாருங்களேன் எனக்கு கறுப்பு பிடிக்கும்..அது உயர்வு என்று நினைப்பேன்.. போய் பக்கத்து வீட்டுக்காரன் ஏன் பச்சை கலர்ல ட்ரெஸ் பண்றான், மரியாதையா சொல்னு என்று கேள்வியும் கேட்பேன். yes எனக்கு வாய் இருக்கு..குரல் இருக்கு.. பக்கத்து வீட்டுக்காரனுக்கு எனக்கு  பதில் சொல்லியே ஆகவேண்டிய அவசியம் என்ன இருக்கு? அவன் தூக்கி ஓரமா போட்டுட்டு போய்டுவான். ஹா ஹா அதே தான். யாரும் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய கேள்வி இல்லை அது. அந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கவே கூடாதது.  அவளை அந்த மினியன்களுக்கும் கூடவே அவனுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் பதில் சொல்ல விட்டிருந்தால் தான் அது ஒரு எழுத்தாளராய் என்னுடைய தவறாகி விடும்  என்று தோன்றியது. நினைத்து பாருங்க, ரூஹி காதல் நாவல்கள் எழுதுபவள், அவளுக்கொரு காரணம் இருக்கும், இதே போல அடல்ட் நாவல்கள் எழுதலாம், க்ரைம் நாவல்கள் எழுதலாம், ஈவன் டார்க் நாவல்கள் எழுதலாம் பான் பிக்ஷன்கள் எழுதலாம். அவர்களை நீங்கள் யாரும் judge பண்ணுவதில்லையா? சொல்லப்போனால் நாங்களே இப்படி அடி வாங்கிக்கொண்டு அவர்களை ஜட்ஜ் பண்ணுவோம்.. 


    காரணங்கள் வேண்டாமே.. அந்தந்த இயங்கு தளங்களின் கட்டுப்பாட்டுங்கிணங்க எந்த படைப்பு வந்தாலும் அதை மதிப்பிடும் வேலை நமக்கேன்? 

    ஒருவரின் அடையாளங்களை மதிப்பீடில்லாமல் கேள்விகளோ காரணங்களோ இல்லாமல்  ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்தை நோக்கி கூட்டிப்போவது ஒரு எழுத்தாளராய் என் சமூகப்பொறுப்பு என்று நினைத்தேன். அதனால் தான் அப்படி வைத்தேன்.


  • என் மனதில் அந்த காட்சி அப்படித்தான் இருந்தது. அவ ப்ரோபெசரா தைர்யமான ஆள், ஆனா எழுத்தாளரா இன்னும் அவளுக்கு தைரியம் இல்லை. முதல் சீன்ல இருந்தே காட்டியிருப்பேன். she was very shy புக் பேரிலும். This is something I am planning to address at the end  இந்த நிமிஷம் வரைக்கும் அது என் ப்ளான்ல இல்லை.. ஓவர் நைட்ல தைர்யம் எல்லாம் கொடுக்க முடியாது..அப்படியே விடுவோம்னு நினைச்சேன்.. நீங்க என்னை யோசிக்க வச்சிட்டீங்க.. சோ பாக் டு தி ஒரிஜினல் டிஸ்கஷன்.. படைப்பு எழுத்தாளனுக்கு மட்டும் சொந்தமானதா? நான் கொண்டு வரப்போற பகுதி..நீங்க என் மைன்ட்ல வச்சது.. ரூஹியே ஒருதடவை யுதியை கேட்பா..செவ்வேல் அவருடைய அறிவை அவருடையதுன்னு எப்படி சொல்வார்னு? ஹா ஹா நான் நீங்கள், நம் விவாதங்கள் எல்லாம் சேர்ந்தது தான் படைப்பு. எதிர் கேள்விகளும் விவாதங்களும் எப்படி தவறாகும்? கேள்வி கேளுங்க.. 

    உங்க பதிலுக்கு காத்திருப்பேன்.. நான் இந்த விவாதத்தை ப்ளாக்கில் போஸ்ட் பண்ணலாமா? வேறு யாரும் கேட்கிறார்களா என்று பார்ப்போம்? எதையும் சுருக்கமா சொல்ல வரலைய்யா..நீளமா போகுது

    10 comments:

    1. 'ஒரு கலைஞநிடம் ஏன் நீ இந்த கலையை படைக்கிறாய்னு கேட்குற இடத்துல எந்த மனுஷனும் இல்ல'னு நீங்க சொல்லி இருக்குறது ரைட்டிங் ஸ்டைல பத்தி கேள்வி/ குறைவா மதிப்பிடறத பத்தினு (And not about the negative/critical feedbacks from your readers nu) நான் நினைக்குறேன். Andha nambikkai la dhan inga badhilum solren. Apdi illa apdina, indha badhil ai padikama or delete seidhidavum.
      ----
      Ruhi, Yudhi initial aa andha challenge podum bodhey students patthi mention panuvaan la, appo neenga sona madri upset aanalum, avan avalai seenda thaan ketkuran, matthapadi avan purinjikra type nu therinjikta nu nenaikren.
      Also, yeah.. andha meeting la insecured aa irundha dhan. Aanlum amidst that+ ava introvert ngradha thaandi, anga Sevvel ku gethha badhil+ avaloda opinion a kudutha, why? because she is such a confidence woman!Correct'a? Apdi irukava idhayum gethavey handle panni irupaaley.
      (Ava insecurity, avaloda bayam elaathu kudayum serthu dhan) Also Yudhi knows this too. Correct'a? apram enanga.. pesa vitrukalam la!
      Naan edhirpaarthadhu, andha gumbal keta kelvigalukaana badhilai kandippa illa. adhuku avasiyamum ila. Avnangaluk edhuk iva solanum modhalla? Why are they to judge her. Kaalaichu vitutu pova nu edhir paarthen. Yudhi ku avaloda badhil thevai ila dhan. Aana andha edathla ava handle pani irukanum situation a nu thonuchu. Ivan atleast 'idhuk nee padhil sola venam..vaa or nee pulla poochis pesatum, or nosecut kudu baby polam' nu assault aa handle pani irundhanga rendu perum na inum joly.

      ReplyDelete
      Replies
      1. இல்லை இல்லை கலையை படைக்கும் போதே இப்படித்தான் படைக்க வேண்டும் என்று எல்லாருக்கும் ஒரு எல்லை வகுக்கப்படுகிறது.அதை சமூகம் வகுக்கிறது. இது தான் இலக்கியம்..இது இல்லை.. நீ சமூகத்தை கெடுக்கிறாய்..அப்படி அதை தான் சொன்னேன்.

        விமர்சனம் எல்லாம் அடுத்த கட்டம்.. விமர்சனம் இல்லாத படைப்பெல்லாம் எப்படி படைப்பாகும்..சோ டோன்ட் வொர்ரி.

        matthapadi avan purinjikra type nu therinjikta nu nenaikren.
        அங்கே அவ அழாம கண்ட்ரோலா இருந்ததுக்கு காரணம் அவளோட அப்பாவின் நம்பிக்கை காரணமா அவளுக்கு யுதி மேல நம்பிக்கை இருந்தது. அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போனதுமே அதனால் தான்.

        இந்த கதையில் ரூஹிக்கு ரெண்டு அவதாரம் இருக்கு. இந்த கதை அடையாளங்கள் பற்றியது. அவளுடைய முதல் கதை இரு பறவைகள் என்று வைத்ததே அதற்கு தான். கதை முழுதும் அவளோட அந்த ரெண்டு அவதாரங்களையும் வித்தியாசங்களையும் என்னால முடிஞ்சவரை பிரிச்சு காட்டினேன்.

        மீட்டிங்கில் பேசியது கான்பிடன்ட் ப்ரபெசர்.
        வெளியே லேடீஸ் கிட்ட பேசினது பயந்தாங்கொள்ளி ரைட்டர்.

        Also, yeah.. andha meeting la insecured aa irundha dhan. Aanlum amidst that+ ava introvert ngradha thaandi, anga Sevvel ku gethha badhil+ avaloda opinion a kudutha, why? because she is such a confidence woman!Correct'a? Apdi irukava idhayum gethavey handle panni irupaaley.

        ofcourse she is a confident prof. Not a confident writer.

        அந்த மீட்டிங்குக்கு வரும் போது யாரா உள்ளே வந்தா? எழுத்தாளராவா? இல்லை. ப்ரோபெசராக. செவ்வேலை கேள்வி கேட்டது கூட அவளின் prof அவதாரம் தான். அந்த செஷனில் வைத்து யாரும் அவளை நீ ரைட்டர் தானே என்று கேட்டிருந்தால் அங்கேயே கதை முடிஞ்சிருக்கும். அவ அழுதிருக்க கூடும்.

        யுதிக்கு தெரியும் அங்கே எல்லாரும் அவள் ரைட்டர் என்று கண்டு பிடிச்சிட்டாங்கன்னு ..அவளுக்கு அந்த லேடீஸ் டைரக்டா கேட்கும் வரை நம்மளை கண்டு பிடிச்சிட்டாங்களோன்னு மனதில் சந்தேகம் தான் இருந்திருக்கும். அதிர்ச்சி..எப்படி அதை எதிர்கொள்றது அவளுக்கு பயம்..

        எந்த இடத்தில் இந்த கதையில் அவளுடைய எழுத்தாளர் அவதாரம் இதற்கு முன்னே எந்த இடத்தில் கான்பிடன்டா இருந்தது? எங்கே அவ தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்டாள்?
        எங்கேயும் இல்லை.. புக் பேரில் கூட உள்ளே மறைந்து தான் இருந்தாள்.

        யுதி facebook ல பிரச்சனையை ஆரம்பித்ததுமே உத்தராவிடம் கேட்டாளே..காய்ச்சல் என்று பொய் சொல்லி நான் ஓடிவிடவா என்று தானே?

        அந்த தருணி விஷயம்.. . சக எழுத்தாளர் என்று நினைத்த போது நமக்கேன் இந்த வம்பு என்று மறைந்திருக்க நினைத்தவள் ஸ்டூடன்ட் என்று தெரிந்த பிறகு தான் அடடா நாம் ஹெல்ப் பண்ணியிருக்க வேண்டுமோ என்று வருத்தப்பட்டாள். அந்தப்பெண் ஸ்டூடன்டாக இருந்திராவிட்டால் அவள் யுதி என்ன சொன்னாலும் நேரில் போயிருந்திருக்க மாட்டாள்.

        கூட்டத்துக்கு போகக்கூட அவ்வளவு பயந்தாள். வரவே மாட்டேன்னு அடம்பிடிச்ச பிள்ளையை ஏழு நாள் கன்வின்ஸ் பண்ணி இவன் இழுத்துக்கொண்டு போனான். அங்கே கூட அவ எழுத்தாளர்னு சொல்லிக்கலை.. அவ எப்படி நோஸ் கட் பண்ணுவா.. அவளை வாயை திறக்க விட்டிருந்தா அழுதிருப்பா அங்கேயே..

        அவ யுதியையே புக்ஸ் பத்தி பேசக்கூடாது என்று off பண்ணிட்டு தான் பழக சம்மதிச்சா.. அவளுக்கு தெரியாமல் அவன் வாயை பிடுங்கி பேச வைத்தானே தவிர..அவ எழுத்தாளரா ரெம்ப வீக். 

        சமூகத்தில் காதல் நாவல்கள் எழுதுவது மரியாதையானது இல்லை. சொல்லிக்க கூட முடியாது. இதில் அவள் ஒரு ப்ரோபெசர் என்பதால் கேள்விகளும் scrutiny உம் அதிகம் இருக்கும். அது அப்படியே பயங்கர தாழ்வு மனப்பான்மையாக மாறும். எங்கே என் தொழில் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்த இடம் இந்த எழுத்தால் கறைபட்டு விடுமோ.. இதெல்லாம் மனதில் வந்து கொண்டே இருக்கும்.

        Delete
    2. (cont..) neenga Kadhayai mudinga. Naan mothama kandippa review sola thaan poren indha dhadavai. Neenga epdi eduthuktaalum parava illai. Naduvula kozhapi, unga flow a disturb panni, kadhayai interrupt panni, sandayai develop panni nu..naaradhar velaigal panna virumbalai ;)

      And..I save my fav quotes of yours as screenshots. Nerayave iruku apdi. Adhula 'சொல்லப்போனால் அவரோட அறிவையே அவரோடதுனு அவரால சொல்ல முடியாது.. எழுத்தாளன் அந்த சங்கிலியை உரிமை கோருவதும், மனுஷன் உணவு சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் ஒரே காரணுத்துக்காய் மொத்த உணவு சங்கிலியும் என் னுடையதுனு உரிமை கோருவதும் ஒன்னுதான்' is one of the recent additions. Enaku pidicha andha quotes'a share lam seiren vera! hope..sandai poda/copyrights nu lam solira maatenga nu.. You are not just a 'kadhal kadhaigal writer' Unga genre adhu dhan naalum.. you deserve much more recognition. Periya aalu sago neenga. Poganum inum dhooram.poveenga too. andha 'unga fav writer+fans' ku munaadi getha, awesome aa! We love your writings.
      Also, 'மனுஷன் உணவு சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் ஒரே காரணுத்துக்காய் மொத்த உணவு சங்கிலியும் என் னுடையதுனு உரிமை கோருவதும் ஒன்னுதான்' ipdi la assault aa pon mozhi udhirkura alavuk appatakkar enga Ruhi. Ava ullukula nadungunaalum 'ponga da dei' handle pannitu 'vartaaaa...'nu Yudhi kuda kelambi vandhrupa naama discuss panitruka andha nimisham appo nu oru edhirpaarpu. Ambuttu dhan. Nalla kozhapi vituten pola. Enaku flow aa sola varadhu. Paravala..vechukonga. All the bestu ;)

      ReplyDelete
      Replies
      1. heart emoji ஒன்லி ஹா ஹா

        இது ஒரு விஷயம் கவனிச்சிருக்கேன். சாதாரண தளங்களில் நாங்கள் judge பண்ணப்படுறதை விட கொஞ்சம் படிப்பு வேலைன்னு மேலே போகும் போது scrutiny இன்னும் அதிகமாச்சு. பர்சனலா நான் பார்த்தது அது. நான் வொர்க் ஸ்டார்ட் பண்ணியதும்.. முதல் வேலையே.எல்லாரையும் கஸ்டம் பண்ணி போட்டது தான். சதா ஜாலியா இயங்கிய நான் facebook ல நான் ஆக்டிவ்வே இல்லாமல் ஆனேன். இன்செக்கியூரிட்டி கூடிச்சு.. காரணம் இல்லாமல் இல்லை.. dumb பீப்பிள் ரைட்ஸ் dumb ஸ்டோரீஸ் என்ற பொது கருத்தியல். அதே கண்ணோட்டத்தோடு என் ப்ரப்போசல்களை. ரிசர்ச் பேப்பரை பார்த்து விடுவார்களோ என்று எனக்கு பயம்... ஆனாலும் எழுதுவதை விடவில்லை..ரகசியமாக பண்ண ஆரம்பித்தேன். இன்னும் தெரியாது யாருக்கும்.

        இப்போ நான் பெமினிஸ்ட் மெதடாலாஜி படிக்கும் போது தான் உள்ளுக்குள் இருந்த சில புண்கள் ஆறுவது போல.. எப்போதும் எனக்குள் இருந்து தான் ஏதும் ஒன்று வரும்.. இதுவும் அதே தான்.

        'மனுஷன் உணவு சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் ஒரே காரணுத்துக்காய் மொத்த உணவு சங்கிலியும் என் னுடையதுனு உரிமை கோருவதும் ஒன்னுதான்'

        அதுக்கு கீழே பேசட்டும் தன்னை மறந்து பேசறா, நம்ம ஏதாவது கேள்வி கேட்டா அவ போட்ட கண்டிஷன் ஞாபகம் வந்து வாயை மூடிடுவான்னு யுதி நினைச்சானே அதை மறந்துட்டீங்களே..அவளும் ஸ்டூடன்சோட பேசறது மாதிரி அதிகம் பேசிட்டேன் என்று கடைசியில் மன்னிப்பு கேட்டாளே.. ;) அங்கேயும் மேடம் prof mode ல தான் பேசறாங்கன்னு உங்களுக்கு சொல்லத்தான் அந்த பிட்டை வச்சேன்... சுய உணர்வோடு இருக்கும் போது மேடமோட வாயில் இருந்து இந்த மாதிரி முத்துக்கள் வராது :D

        வெயிட்டிங்யா.. லவ் யூ.. கான்வசேஷன் இல்லாத கதைகள் one way road மாதிரி.. அடுத்த ரூஹி POV வரும் போதே உங்களுக்கு அவளோட இன்செக்கியூரிட்டி லெவல் ஆஸ் ஏ ரைட்டர் தெரிஞ்சிரும். தொடர்ந்து பேசலாம்.. <3

        Delete
      2. Ruhi avaludaya Professor vs Writer avatars kulla, conscious aa seyal padum bodhu ivlo strigent boundary vechruka!!! Kadhayoda travel panum bodhu realise panen naalum, ivlooo strict officer aa paya pulla maintain panitruku nu yosika thavariten. Neenga ipo solum bodhu, unga POV ketkum bodhu.. whoaa ivloo kuriyeedugal kuduthrukeengale nu awestruck zone la nikren!!
        "En avala pesa vidala?" nu nalla velaiku keten polaye.. Ava pesadha pechellam, naama neraya pesitom! Adhuvum UNGA POVs😍 "kanna..rendu laddu"dhan!
        What you are going through ngradha romba azhaga unga ezhuthukkal vazhiya solitruka oru cool writer neenga! You go girl🎉
        And.. IT IS WHAT IT IS!! waiting for the Persian poonai & her aal to seekiram come...
        Thank you, Love you ezhuthaalare💜enaku indha interaction rombave pidichidhu!!!

        Delete
      3. Haha me too! Sometimes I would call burned rice 'smoked' 😁 just kidding. I enjoyed the exchange too. That'swhy I explained my thought process as well. love you! 😘

        Delete
    3. நல்ல கேள்விகள்.. அருமையான பதில்கள்

      ReplyDelete
    4. 'Sometimes I would call burned rice 'smoked' '....? 🤔

      ReplyDelete
      Replies
      1. Sometimes i make mistakes too. Yaravathu ketta intended nu adichu viddurrathum nadakkum. Avalum manushi thane avalukum 😂😂😂

        Delete

    அகம் முழுக்கதை

     ஹாய் மக்கள்ஸ்..  இங்கே அகம் முழுக்கதையை படிக்கலாம்.  https://drive.google.com/file/d/1F2OeFSh-OyvsYKjmqq8N1BVfpVGPYWTm/view?usp=sharing இரண...